இப்போதைய மலேசியா அரசியல் நிலைமையை பார்த்தல் இன்னொரு சுனாமி வெகு விரைவில் ஆளும் கட்சியை தாக்கும் என நினைக்கிறேன். ஒரு பக்கம் முக்ரிஸ் முஹமது பிரதமரை பதவி விலக சொல்கிறார். இன்னொரு பக்கம் தெங்கு ராசலியும் படாவிக்கு நெருக்குதல் அளிக்கிறார். ரபிடாவும, படாவியின் மருமகன் கைரியை விமர்சித்து கடிதத்தை படாவிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் அன்வார், வெகு விரைவில் எதிர்க்கட்சிகள் சேர்த்து அரசாங்கம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
சாமி வேலுவும் சுப்ராவும் இணைந்து மலேசிய இந்திய காங்கிரஸ்சை மீண்டும் செம்மையக்க போகிறார்கலாம்.. அது எப்படி என்று நாம் பொருத்துதான் பார்க்க வேண்டும்!! எதிர்க்கட்சிகள் இந்திய மக்கள் சீண்டப்பட்ட போதும் உதாசினப்பட்ட போதும் குரல் கொடுத்தனர்!! அதனால்தான் இந்திய மக்களின் ஓட்டு எதிர்க்கட்சிகள் பக்கத்தில் சேர்ந்தது! இந்திய மக்களின கஷ்ட காலத்தில் ஒன்று சேராதவர்கள் இப்பொழுது அதிகாரம் பறிபோனதும் கொஞ்சி குலவாட ஆரம்பித்து இருக்கிறார்கள்!! இதுதான் சாக்கடை அரசியலோ? ரொம்ப நாறுது லா!!!
பகுதி இரண்டு தொடரும்..