சர்வாதிகாரம் மற்றும் ஆணவம் பிடித்த அரசாங்கங்கள் இருந்த இடம் தெரியாமல் போவது வரலாறு கண்ட உண்மை. இந்த மலேசியா திருநாட்டில் இப்பொழுது நடந்து முடிந்திருக்கும் தேர்தல் முடிவுகள் மக்களின் எழுச்சியையும், சக்தியையும் மற்றும் தேசிய முன்னணியின் மீது உள்ள வெறுப்பையும் தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது!
டத்தோ ஸ்ரீ சாமிவேலு சுங்கை சிப்புட்டில் தோல்வி கண்டது மலேசிய இந்திய காங்கிரிஸ்சின் மீது மலேசிய இந்தியர்கள் வைத்துள்ள அவநம்பிக்கையை சொல்கிறது..
அண்மையில் "மலேசியா நண்பன்" மற்றும் "மக்கள் ஓசை" பத்திரிகைகளில் ஒரு மலேசிய இந்திய காங்கிரிஸ்சின் தொகுதி செயலாளர் மூன்று தமிழ் பத்திரிகைகளையும் ஆறு மாதத்துக்கு இழுத்து மூடப்பட வேண்டும் என்ற செய்தி வெளியானது.. இது போன்ற அரைக்வேக்காடு @ சமூதாய துரோகி மலேசிய இந்திய காங்கிரிசில் இருந்தால் எப்படி உருப்படும் இந்த கட்சி? மலேசிய இந்திய காங்கிரிஸ் இது போன்ற அறிவிலிகளை களையெடுத்துவிட்டு நன்கு படித்த மற்றும் சிந்தனை வளம், மக்களை நன்கு வழிநடத்தும் ஆற்றல் உள்ள புதிய இளையவர்களை மலேசிய இந்திய காங்கிரிசில் அமர்த்துவது நல்லது!
தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கு பாதகமாக இருக்குமென நான் எதிர்பாத்த ஒன்று.. ஆனால் ஐந்து மாநிலங்கள் எதிர்க் கட்சிக்கு போகும் என்பது எனக்கு சந்தோசம் கலந்த அதிர்ச்சியை அளித்து.. மலேசியா மக்கள் ஒரே இனம் சார்ந்த கட்சிகளை புறக்கணித்து விட்டு பல இனங்கள் சார்ந்த கட்சிக்கு நாட்டை ஆள வாய்ப்பு அளித்து இருப்பது அவர்களின் பரந்த சிந்தனையை காட்டுகிறது..
ஆனால் இவ்வளவு தோல்விகள் கிடைத்தும் நமது தூங்கும் நாயகன் இன்னமும் தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது ஒரு நகைச்சுவை.. இன்னும் சுகமான கனவில் இருந்து தூங்கும் நாயகன் மீளவில்லை போல..
தூங்கும் நாயகன் கொஞ்சம் விழித்து மிக்க அனுபவம் நிறைந்த அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு நாட்டை வழி நடத்துவது சாலச் சிறந்தது.. அக்ச்போர்ட் பல்கலைகழகத்தில் படித்தவர் என்று ஒரே தகுதியை வைத்து ஒரு நாட்டை ஆள பிரதம மந்திரிக்கு ஆலோசனை சொல்லுவது எல்லாம் சரியாக இல்லை!!