Sunday, January 06, 2008

Im A Legend - நான் பார்த்த படம்

நான் பார்த்த இன்றைய ஆங்கில படம் என் சிந்தனையை தூண்டியது! ஒரு நாள் மனிதர்கள் எல்லாம் அழிந்து நாம் ஒருவர் மட்டும் உயிர் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? வில் சிமித் இந்த படத்தில் ஒரு ராணுவ மருத்துவ ஆய்வாளராக சிறப்பாக நடித்துள்ளார். வைரஸ்சால் பாதிக்கப்படும் மனித குலத்துக்கு அவர் எப்படி உதவுகிறார் என்பதை படத்தை பார்த்தால் புரியும். நெஞ்சு வழி அல்லது பயந்த சுபாவம் உள்ளவர்கள் பக்கத்தில் மற்றவர் துணையுடன் படம் பார்ப்பது நல்லது. மொத்தத்தில் இது நல்ல பொழுது போக்கு படம்.
Poster taken from I am Legend official website.

உலகம் எவ்விதம் அழியும்? உலகில் வாழும் சில லச்சம் மனிதர்களே சிந்திக்கும் விஷயம் இது! மூன்றாம் உலக யுத்தம் மூண்டால் மனித குலம் நிச்சயம் அழிவை எதிர்நோக்கும் என்கின்றனர் பலர். மனிதனால் உருவாக்கப்படும் சக்திமிக்க குண்டுகள் அல்லது விஷ வாயுவினால் மனிதர்கள் இறக்க வழி வகுக்கும் எனப்படுகிறது. ஒரு வேளை "Im A Legend" படத்தில் வருவது போல் புது வித வைரஸ்சால் நாம் கொள்ளப்படுவோமா? வான்வெளி மின் கற்களால் உலகத்தில் ஒரே கணத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் மடிவர் என்பது இன்னொரு கணக்கு. கணக்குகள் பலவிதம் ஆனால் மரணம் என்பது அனைவரின் வாழ்வில் உள்ள விஷயம்தான். வாழும்வரை தர்மம் செய்தும் மற்றவர்களுக்கு நல்லது செய்தும் வாழ்வோமாக... நல்லது செய்ய முடியாவிடின்; கெடுதி செய்யாமல் இருப்பது மிக்க நலம்!