தைப்பூசம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. நானும் மலேசியாவின் புகழ் பெற்ற முருகக் கடவுள் தளமான பத்துகேவ்ஸ் போய் இருந்தேன்.. இந்த வருட திருவிழாவின் மக்கள் கூட்டத்தை காணவே அங்கு சென்றேன். திருவிழாவில் கடந்த தைப்பூசத்தை விட மக்கள் தொகை குறைவாகவே இருந்தது..
ஆனால் அவ்வப்போது ஒளிபரப்பபட்ட அறிவிப்பில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதை கேட்டு எனக்கும் என் தோழர்களுக்கும் சிரிப்புதான் வந்தது... மேடையில் அன்று மைக் பிடித்த தமிழனே இன்னும் உனக்கு ஏன் இந்த பொய்...?
இந்து மக்கள் தைப்பூசத்தை புறக்கணித்தது கோவில் நிர்வாகத்தினருக்கு உரைத்து இருக்குமா? அப்பனே முருகா அது உனக்குத்தான் வெளிச்சம்...
மக்கள் சக்தி போராட்டத்தின் விளைவால் மலேசிய இந்திய மக்களின் ஒற்றுமையை நான் இங்கு கண்டேன்..உணர்ந்தேன்.. போராட்டம் தொடரட்டும்..இந்த மண்ணில் வாழ இருக்கும் நம் இன சந்ததியினருக்கு மிகச் சிறந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும்.. வாழ்க மக்கள் சக்தி!!