Friday, January 04, 2008

புதிய ஆண்டே நீ வருக..யாவருக்கும் நன்மைகளை கொடுப்பாயாக..

2008 - இந்த புதிய ஆண்டு உலக வரலாற்றில் மேலும் பல நல்ல கெட்ட நிகழ்வுகளை பதிக்கும் என்பதில் ஐயமில்லை. வருட தொடக்கம் மேலும் ஒரு ரத்த கறையோடு நடைப்போட ஆரம்பித்து இருக்கிறது.. பெனாசிர் புட்டோவின் கொலை பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் அரங்கை மிகவும் சிக்கலுக்கு தள்ளி இருக்கிறது. யார் பெனாசிர் புட்டோவை இறப்புக்கு காரணம்? இதுதான் இன்றைய கேள்வி.. பதில் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது..உங்களுக்கு தெரியுமா..?

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இன்னொரு பக்கம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது. வெற்றி யார் பக்கம்? ஒபாமாவா, எட்வர்ட்ஸ் அல்லது ஹிலாரியா... என் ஆதரவு ஒபாமாவுக்கே! :-)

அடுத்து மலேசியாவின் பக்கம் வருவோம்..இங்கும் தேர்தல் நேரம் நெருங்கி வருகிறது. மலேசியாவின் ஆளுங்கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் ஆனால் கடந்த பெருன்பான்மை வெற்றி கிட்டுமா என்பது இன்னொரு கேள்வி.. Hindraf எழுச்சி மக்களிடம் ஒரு விழிப்பை@தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் ஓட்டு எப்பக்கம் என்பது மலேசியாவில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தால் ஓரளவு புரியும்.

பல்லாண்டுகளாக தங்களின் சுதந்திரத்திற்காக உதிரத்தை கொடுத்து தன்னலம் பற்றி யோசிக்காமல் தன் தமிழ் இனத்திற்காக போராடும் போராளிகளே.. தர்மம் இறுதியில் வெல்லும்.. தமிழ் வீரர்களே உமக்கு எமது வணக்கங்கள்!

தன்னலம் கருதாமல் மனிதனை இனம், மதம், ஜாதி என்று பிரித்து பார்க்கவிடில் இவ்வுலகில் பிரச்சினைகள் இருக்காது. இந்த ஆண்டு உலகில் நன்மைகள் பல நடக்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை ஆகும்.

இன்பமே சூழ்க; எல்லோரும் வாழ்க..