குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் பிஜேபி மீண்டும் பெரும்பான்மையில் வெற்றி பெற்று உள்ளது. பிஜேபி ஆட்சியில் இந்தியா விரைந்து ஒரு வல்லரசாக உருவாக நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் உலக போலிஸ், சர்வதிர்காரி அமெரிக்காவின் கை(தலையீடு) ஓங்குகிறது. அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தால் என்ன ஆகும் என்பதை ஈராக்,ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை பார்த்தால் தெரியும். இந்தியா முன்பு போல ரஷ்யாவின் பக்கம் இருப்பது மிக்க நல்லது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் புதிய உலக வல்லரசுவாக கண்டிப்பாக உருவாகும். இப்போதைக்கு இந்தியா சீனா தேசத்துடன் நட்புறவரை கொண்டிருப்பது மிகவும் நல்லது. ராஜா ராஜா சோழன், சந்திர குப்த மௌரியர், அசோகர், ஹஸ்வர்த்தனர் ஆண்ட இந்த பாரத தேசம் வெகு விரைவில் அதன் பழைய பெருமையை அடையும் நாள் வெகு தூரம் இல்லை. ஜெய் ஹிந்த்.. வெற்றிவேல் வீரவேல்!!!