
பில்லா நமது தல நடித்து திரைக்கு வந்த புத்தம் புது திரைப்படம். இந்த பில்லா ஒரு பயங்கர மபியா குழு தலைவன். இவன் பயத்துக்கே பயம் உண்டு பண்ணுபவன், மனித உயிரை பற்றி கவலைப்படதவான். போலிஸ்சுடன் ஏற்படும் சண்டையில் இறந்து போகிறான். மபியா குழுவின் பெரிய மீனை பிடிக்க போலிஸ் வேறோர் இடத்தில் வேலுவாக இருக்கும் இரண்டாவது தல அஜித்தை மபியா குழுவுக்குள் அனுப்புகிறது. மொத்த மபியா குழுவும் போலிஸ்சிடம் எப்படி அகப்படுகிறது அல்லது சாகிறது என்பதுதான் மீதக்கதை.

தல மபியா குழுவின் தலையாக ஒரு கலக்கு கலக்குகிறார், நயந்தாராவின் உடல் வனப்பில் நமீதாவின் கவர்ச்சி எடுபடவில்லை. விஷ்ணுவர்த்தனின் இயக்கத்தில் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஸ்டண்ட் காட்சிகள் மிக நன்றாக எடுக்கப்பட்டு உள்ளது. 'என் பேரு பில்லா' ரீமிக்ஸ்சும் 'சேவல் கொடி', 'வெத்தலைய போட்டேன்டி' பாட்டும் நன்றாக இருக்கிறது. தலைக்கு இந்த படம் கண்டிப்பா ஒரு பிரேக் கொடுக்கும்.
