சிவா மனசுலே சக்தி.. அல்லது சக்தி மனசுலே சிவா.. அழுத்தமான கதை களம் இல்லாவிடினும் இது ஒரு ஜாலியான படம்! சிவா மற்றும் அவனது காதலி சக்தி இடையே எழும் ஈகோ பிரச்னை இருவருக்கும் துன்பத்தை தருகிறது. சந்தானம் ஜீவாவின் காமெடி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.. இந்த வசனம் ஜீவா (சிவா) படத்தில் பேசியது.. இந்த மாதிரியான இங்கலிஷ் படம் முழுக்க உள்ளது!! :-) படத்தை என்ஜாய் பண்ணி பார்க்கலாம்!!
Sunday, March 15, 2009
உண்மையா பொய்யா???
Friendtser,FaceBook போன்ற இணையதளங்கள் CIA,FBI போன்ற அமெரிக்க அரசாங்கத்தின் அமைச்சுகளின் உளவு/வேவு வேளைக்கு பயன்படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உண்மையா இல்லை பொய்யா என்பது அவரவர் எண்ணைத்தை பொருத்தது என்றாலும் நமது சொந்த தகவல்களை இணையத்தில் கொடுப்பது உண்மையிலேயே பாதகமானது!!
ஓம் நமசிவாய!!
கடந்த புதன்கிழமை (11/03/2009) என் அலுவலக தோழர்களுடன் காற்பந்து விளையாடிய பிரகாஷ் என்ற தோழர் விளையாடும்போதே விழுந்து மரணமுற்றார். அந்த நிகழ்வு நான்/நாங்கள் எதிர்ப்பார்க்காத ஒன்று!! கடந்த வாரம்தான் ஒரு தோழி "வெண்ணிலா கபடி குழு" என்ற தமிழ் படத்தை பார்த்துவிட்டு விளையாடும்போது எப்படி ஒருவர் இறக்க முடியும் என்று ஐயம் எழுப்பினாள். ஆனால் இந்த மாதிரியான ஒரு துயரச் சம்பவம் என்னை சுற்றி நடக்குமென நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஒவ்வொரு வாரமும் காற்பந்து விளையாடும் நான் ஏனோ தெரியவில்லை கடந்த புதன்கிழமை விளையாட போகவில்லை..விளையாடும் எண்ணம் இல்லை என்றே சொல்லவேண்டும்!!! நண்பர் பிரகாஷ் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வாழ்வா இறைவனை வேண்டுகிறேன்! ஓம் நமசிவாய!!
Tuesday, March 10, 2009
Subscribe to:
Posts (Atom)