Saturday, October 04, 2008

மலேசியா திருநாட்டில் கோவில் உடைப்புகள்..ஏன்???

ஒரு வருடத்துக்கு முன்பாக ஒரு கோவில் உடைப்பட்டால் அதை தட்டி கேட்டவர்கள் சிலர் மட்டுமே..அந்த நல்ல உள்ளங்களும் இன்று இசா என்ற கொடூர சட்டத்தின் பிடியில் இருக்கின்றனர்!

மலேசியா இந்தியர்களின் மன பிரதிபலிப்பு கடந்த பொது தேர்தலில் எதிரோலித்தது!!!
இன்று ஒரு கோவில் உடைப்பட்டால் தட்டி கேட்டு மறியல் பண்ணி நியாயம் கேட்க  பலர் உள்ளனர்..சந்தோஷம் & மிக்க நன்று!

ஆனால்...கோவில் உடைப்பின் முக்கிய காரணத்தை (ரூட் காஸ்) நிவர்த்தி செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் தீரும்.. இங்கு பல கேள்விகள் எழுகின்றன!!

ஒவ்வொரு தடவையும் கோவில் உடைபட்டால் நாம் மீண்டும் மீண்டும் மறியலில் இறங்க வேண்டுமா? ஏன் சிறு தெய்வ வழிபாடுகள் அதிகம் உள்ளன? உங்கள் சொந்த நிலத்தில் யாரோ ஒருவர் குடிபுகுந்து வாசம் செய்தால்..நீங்கள் வெறுமென ஒன்றும் செய்யாமல் இருப்பீர்களா? இந்த கேள்விகள் அனைத்துக்கும் முழு தீர்வு என்ன?

இங்கு நம் இந்தியர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் மற்றும் இந்து சங்கமும் நிறைய பங்காற்ற வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு முதல் காரணம் இந்து சமயம் பற்றிய முறையான அடிப்படை கல்வி நமது மக்கள் இடையே இல்லை என்பதுதான்! இரண்டாவது காரணம், ஒரு ஆலயம்/கோவில் ஏன் முறைப்படி அரசாங்கத்தின் அனுமதி பெற்று கட்டப்படுவது முக்கியம் சிறிதும் என்பதை கருதாமல் அலச்சியமாக இருப்பது!!

இந்து சமயக் கல்வி அளிப்பது நேரம், காலம் அதிகம் எடுக்கும் என பலர் நினைக்கலாம்..இன்று நாம் தொடங்கினால் நமது அடுத்த தலைமுறையிலாவது இந்த கோவில் உடைப்பு பிரச்சனைகள் குறைய வாய்ப்புண்டு!!

நமது மலேசியா திருநாட்டில் எத்தனை ஆலயங்கள் இந்து சமயக் கல்வியை போதிக்கின்றன? எத்தனை ஆலயங்களில் இந்து சமயத்தை பற்றி உரைகள் நிகழ்த்தபடுகின்றன?
நாம் இன்று தொடக்கும் முதல் அடி பயணம் நமது எதிர்கால சந்ததியினர்ற்கு நற்பலனை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை!!

குறிப்பு:
காணிக்கையாக லட்ச கணக்கில் கோவில்களுக்கு நாம் கொடுக்கும் பணத்தை இந்து சமய கல்வியை நடத்தவும் நமது அருகாமையில் அரிய நிலையில் இருக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் கொடுத்து உதவினாலே நாம் மற்றவர்களிடம் எதிர்பார்த்து நிற்க தேவை இல்லை! நமது சமுதாயம் முன்னேறும்!!